Tuesday, January 29, 2013

விஸ்வரூபமாகி போன விஸ்வரூபம்


கமல்ஹாசனின் பிரமாண்ட தயாரிப்பான விஸ்வரூபம் வெள்ளித்திரையில் ரிலீஸாகுமா?, DTH-ல் முதலில் வெளியாகுமா? என்கிற விவாதம் தான் கடந்த ஒரு மாத காலமாகவே தமிழ்த் திரையுலகைக் கலக்கிக் கொண்டிருந்தது. இப்போது இரண்டும் இல்லாமல் திருட்டு வி.சி.டி.-யில் தமிழகத்தில், அது அறிமுகமாகிவிட்டது என்பதுதான் வேதனை.
    கமலின் விஸவ்ரூபம் படம், ஜனவரி 25-ந் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கடந்த 23-ம் தேதி படத்தை வெளியிட 15 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு. ஆனால் மலேசியாவில் திட்டமிட்டப்படி விஸ்வரூபம் தியேட்டர்களில் வெளியானது. இதையடுத்து அங்கிருந்துதான் திருட்டு வி.சி.டி.-க்கள் தமிழகத்திற்கு அணிவகுக்கத் தொடங்கியுள்ளது. இணையதளத்தில் முழுப் படமும் வெளியானதாகவும் தகவல்கள் வருகின்றன. படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போனால், திருட்டு வி.சி.டி. விற்பவர்களுக்குத்தான் லாபம்.
    நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் செல்வமணி ஆகிய இருவர் மட்டுமே முதலில் கமலுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டனர்.  இந்திப்பட உலகில் இருந்து சேகர்கபூர் படைப்பாளிகளின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக கொந்தளிப்பை வெளிப்படுத்தினார். 25-ம் தேதி பிற்பகலில் நட்ட்கர் ரஜினிகாந்த் கமலுக்கு ஆதரவாக அறீக்கை வேளியிட்டார். அதன்பிறகே இயக்குனர் பாரதிராஜா, நடிகர்கள் அஜித், பார்த்திபன் எனப் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
    சினிமா விசா ஒன்றில் பேசிய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ராதாரவி ஆவேசப்பட்டாலும் நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வர் இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று நாசூக்காக முடித்துக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சங்கம் கழன்றுகொள்ள, FEFSI பொதுச்செயலாளரான இயக்குனர் அமீர், படத்தைப் பார்த்துவிட்டுத்தான் எனது கருத்தைத் தெரிவிப்பேன் என்று கூறிவிட்டார்.
    அரசின் உத்தரவை எதிர்த்து கமல் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதனை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், படத்தை தானே பார்த்து முடிவு செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். அதன்படி கடந்த 26-ம் தேதி படம் காண்பிக்கப்பட்டது. நீதிபதியுடன் இரு தரப்பையும் சேர்த்து சுமார் 50 பேர் படம் பார்த்தனர்.
    வழக்கு 28-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது,  நீதிபதி, படத்துக்காக பெரும் தொகை செலவு செய்திருந்தாலும், மக்கள் நலனும் சட்டம் ஒழுங்கும் மிக முக்கியம். கமல்ஹாசன் சென்னைக்கு வந்துவிட்டதால் அரசின் உயர் அதிகாரிகளுடன் உட்கார்ந்து பேசவேண்டும் என்றார் (பின்ன என்னத்துக்கு நீதிபதி ஓசி-யில படத்தைப் பார்த்தார்)
    நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே படத்தின் தலைவிதி தெரியவரும். இதற்கிடையே, படத்தை DTH-ல் வெளியிட இனி முன்புபோல அந்த நிறுவனங்கள் ஆர்வமாக இல்லை.
    முஸ்லிம்கள் அமைப்புரீதியாக வலுவாக உள்ள கேரளாவில் இந்தப் படம் வெற்றிகரமாக ஊடுவதை கமல் தரப்பினர் மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டுகிறார்கள். இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் கமல்ஹாசன்......
          இன்று (29-01-2013) முதல்வர் கமலை பார்க்க நேரம் ஒதுக்குவார் என்று பலரும் கூறினர், ஆனால் முதல்வர் எதற்கும் செவிசாய்க்கவில்லை...
    29-ம் தேதி இரவு 10 மணியளவில், சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.... (ரொம்ப சந்தோஷம்).. ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது....


Kamal’s interview
Kamal's interview...
Battle against :"Cultural Terrorism" - a timeline
http://murugesansenthil.blogspot.in/2013/01/timeline-battle-of-vishwaroopam.html

No comments:

Post a Comment